வரவிருக்கும் பிரிக்ஸ் (BRICS ) கூட்டத்தில் புதிய கரன்சியை வெளியிடுவது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய பிரிக்ஸ் நாணயத்தை (BRICS Currency) வெளியிடப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22 முதல் 24 வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டத்தில் புதிய பிரிக்ஸ் நாணயம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
44 நாடுகள் ஆதரவு!
இம்முறை இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என அதிபர் பதவிக்கு தலைமை வகிக்கும் தென்னாப்பிரிக்கா கூறினாலும், இந்த சந்திப்பில் ரஷ்யா டாலருக்கு எதிரான போக்கை வலுப்படுத்தும் என்பது உறுதி.
44 நாடுகள் எதிர்கால BRICS நாணயத்தைப் பயன்படுத்தும் என்று ரஷ்யா நம்புகிறது, மேலும் பல நாடுகள் BRICS-ல் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், BRICS கரன்சியின் அம்சங்களை விவரிக்கும் பிரசாரத்தையும் ரஷ்யா தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன், உறுப்பு நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை நாணயம் குறித்து விவாதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும் என தெரிகிறது.
புடின் பிரிக்ஸ் கூட்டத்தில் கலந்து கொள்வாரா?

உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட் நிலுவையில் உள்ளதால், புடின் பிரிக்ஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. அதற்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்பார் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதேநேரம், அதிபர் புடின் வீடியோ அழிப்பில் கூட்டத்தில் பங்கேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிரிக்ஸ் கூட்டத்தொடர் சர்வதேச சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் சந்திக்கும் போது, உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைக்கும் கூடுதல் பணியும் ஆப்பிரிக்காவுக்கு உள்ளது.
