கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உலங்குவானூர்தியில் சென்ற ரணில்

0
153

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்றுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 01.43 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-195 இல் இந்தியாவின் புதுடெல்லிக்கு சென்றனர்.

இலங்கை விமானப்படையின் இரண்டு விசேட உலங்கு வானூர்திகளில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விஜயம்

இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு பூர்த்தியாகி உள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியாக ரணில் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.