ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று மாலை சந்திப்பு

0
286

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஆளும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. குறித்த விசேட சந்திப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளது. 

இன்றைய தினம் மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சந்திப்பில் பங்கேற்கும் கட்சிகள்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளன.

அரசாங்கத்தினை முன்னெடுத்துச் செல்வதில் நிலவி வரும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.