அமெரிக்காவில் பள்ளியை விற்க முயன்ற மாணவர்கள்! வைரலாகும் பதிவு

0
244

அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பாடசாலையை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாணவர்கள் மேற்கொண்ட செயல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள மீட் உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில் விளம்பரம் செய்து பாடசாலையை விற்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரியல் எஸ்டேட் வலைத்தளமான ஜிலோவில் குறித்த விளம்பரம் வைரலாகி வருகின்றது.

மேரிலாந்தில் உள்ள மீட் உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலையின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, “நல்ல, ஆனால் பாதி வேலை செய்யும் சிறை” என்று கேலியாகத் தலைப்பிட்டனர்.

மேலும், பாடசாலையில் உள்ள 15 குளியலறைகளில் வடிகால் பிரச்சினை இருப்பதாக விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல சமையலறை மற்றும் ஒரு சாப்பாட்டு அறை உள்ளது. ஒரு தனியார் கூடைப்பந்து மைதானத்தில், “எலிகள், அணிகள் மற்றும் பிழைகள், அவை உங்களை சத்தமிட வைக்கும்” என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் பள்ளிப்படிப்பு செலவு $42,069 (34 லட்சம்) என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவு வைரலாக பரவியதையடுத்து, சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் அதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.