பாயாசம் சுவையாக இல்லை என கூறி மாப்பிள்ளை, பெண் வீட்டார் மோதிக் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
தமிழகத்தின் மயிலாடுதுறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்திற்காக இருவீட்டாரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகின்றது.

திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்
சாப்பிடும் போது பெண் வீட்டார் பாயாசம் சரியில்லை எனக் கூறி மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மாப்பிள்ளை வீட்டார் ஆத்திரத்தில் சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

குறித்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில் 90 கிட்ஸ் எல்லாம் அவனவன் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லையே என ஏங்கி கிடக்க உங்களுக்கு பாயசத்துக்கும் அடிபாடாடா என நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
