‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட உக்ரைன் வீரர்கள்!

0
208

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ராம்சரண்-ஜுனியர் என்.டி.ஆர். ஆட்டத்தில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது.

அதோடு, இந்த பாடல் ஒஸ்கார் விருதையும் வென்றது. படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தனர்.

ஆர்ஆர்ஆர் பாடலுக்கு செம ஆட்டம்போட்ட உக்ரைன் வீரர்கள்!(Video) | Ukrainian Players Played To Rrr Song

சமூக வலைதளங்களில் வைரல்

ராம்சரண் – ஜுனியர் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது உக்ரைன் இராணுவ வீரர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ‘நாட்டு நாட்டு’ பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது.

ஆர்ஆர்ஆர் பாடலுக்கு செம ஆட்டம்போட்ட உக்ரைன் வீரர்கள்!(Video) | Ukrainian Players Played To Rrr Song

அதன் பின்னர் சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்த நிலையில் போருக்கு மத்தியில் உக்ரைன் வீரர்களின் நடனத்தை பாராட்டி நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதேசமயம் உக்ரைன் வீரர்கள் இந்த வீடியோ 6 இலட்சம் பார்வைகளையும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்களையும் குவித்துள்ளது.

https://twitter.com/jane_fedotova/status/1663297097783734274?s=20