வலுவடையும் ரூபா – மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு..! நிதி இராஜாங்க அமைச்சர் கூறும் விடயம்

0
153

நாட்டில் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருகின்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தந்திரிமலை பகுதியில் நேற்று (04.06.2023) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

வலுவடையும் ரூபாவின் பெறுமதி

மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.

வலுவடையும் ரூபா - மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு..! நிதி இராஜாங்க அமைச்சர் கூறும் விடயம் | Sri Lanka Rupee Rate Against Dollar Economy

இந்த நிலையில் அரச செலவினங்கள் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது.

நாட்டிலும் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருகின்றது. 2024ஆம் ஆண்டுக்கு செல்லும் போது இதனை விடவும் அதிகளவில் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.

அதற்காக நாம் வரங்களையும் கடப்பாடுளையும் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி

வலுவடையும் ரூபா - மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு..! நிதி இராஜாங்க அமைச்சர் கூறும் விடயம் | Sri Lanka Rupee Rate Against Dollar Economy

இவ்வாறான சூழலில் எதிர்காலங்களில் உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தரவுகள் தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.