கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

0
269

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு கமல்ஹாசன் வாழ்த்து! | Kamal Haasan Congratulates The New Governor

அதற்கு நன்றி தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கமல்ஹாசன் அவர்களை கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.