அவுஸ்திரேலியாவின் மிகவும் மோசமான பெண் தொடர் கொலையாளிக்கு பொதுமன்னிப்பு

0
108

அவுஸ்திரேலியாவின் மிகவும் மோசமான பெண் தொடர் கொலையாளி என அழைக்கப்படும் கத்திலீன் பொல்பீளிக் என்ற பெண்ணிற்கு நீதிமன்றம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.

கத்திலீன் பொல்பீளிக் தனது நான்கு பிள்ளைகளையும் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு முன்னர் நீதிபதியொருவர் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்திருந்தார்.

நீதி பிழைத்த மிகப்பெரும் சம்பவம்

எனினும் சமீபத்தைய விசாரணைகளின் போது அவரது பிள்ளைகள் இயல்பாகவே மரணத்தை தழுவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 55 வயதான இந்த பெண்மணியின் வழக்கு அவுஸ்திரேலியா நீதிபிழைத்த மிகப்பெரும் சம்பவம் என வர்ணிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தான் அப்பாவி என எப்போதும் கத்திலீன் பொல்பீளிக் தெரிவித்து வந்த நிலையில் 2003 ம் ஆண்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மிகவும் மோசமான பெண் தொடர் கொலையாளிக்கு பொதுமன்னிப்பு | Amnesty For The Worst Female Serial Killer

கத்திலீன் பொல்பீளிக்கின் நான்கு பிள்ளைகளும் 1989 முதல் 99ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உயிரிழந்த நிலையில் அதிகாரிகள் பொல்பீளிக் அவர்களை கொலை செய்தார் என தெரிவித்தனர்.

எனினும் ஓய்வுபெற்ற நீதிபதி டொம் பத்ரஸ்ட் தலைமையில் இடம்பெற்ற புதிய விசாரணைகளின் போது மரபணுமாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் அவரின் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்த அவர்களின் புரிதலை மாற்றிவிட்டதாக சட்டத்தரணிகள் ஏற்றுக் கொண்டனர்.

எனவே பொல்பிக் ஒவ்வொரு குற்றத்திலும் குற்றவாளியா என்பது குறித்து சந்தேகம் உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி டொம் பத்ரஸ்ட் தெரிவித்துள்ளார்.

நியுசவுத்வேல்சின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவில் நியுசவுத்வேல்ஸ் ஆளுநர் கைச்சாத்திட்ட நிலையில் பொல்பிக்கை உடனடியாக விடுதலை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.