காட்டு யானைத் தாக்கியதில் உயிரிழந்த யுவதி; காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0
76

உடதியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தி உள்ளார். அத்தோடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காட்டு யானைத் தாக்கியதில் உயிரிழந்த யுவதி; காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Lover Of The Young Woman Died After Being Attacked

இரவில் தங்கிய இளம் ஜோடி

கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசித்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சம்பத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலன் வழங்கிய வாக்குமூலம் முரண்பாடாக காணப்பட்டதால் பொலிஸாரால் அவர் கைது செய்யபடப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.