இலங்கையில் கால்பதிக்கும் சீன நிறுவனம்

0
185

நாட்டில் இரண்டு மாதங்களில் சினோபெக் நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார் .

எனவே இன்னும் ரு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்  கூறினார்.

இலங்கையில் கால்பதிக்கும் சீன நிறுவனம் | A Chinese Company Operating In Sri Lanka

 150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் 

இதேவேளை ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு மாதங்களில், 150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.

  அதன் பின்னர் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கப்படும் , பின்னர் நடைமுறையில் உள்ள QR குறியீட்டு முறைமையும் நீக்கபடும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.