யாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்…

0
83

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இத்தகவலை துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதி

தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதோடு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

யாழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான தகவல்; ஏழு நாட்களும் சேவை | Seven Days Service Jaffna International Airport

மேலும் இந்த கடனுதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.