லண்டனில் பாதுகாப்பில்லை ஸ்பெயினில் குடியேறி, கனவு வாழ்க்கை வாழ்கிறோம்..

0
122

லண்டனில் பாதுகாப்பாக வாழ முடியாது என்ற காரணத்தால் ஸ்பெயின் நாட்டில் குடியேறிய தம்பதி ஒன்று தற்போது தங்கள் கனவு வாழ்க்கையை வாழ்வதாகவும், மாதம் ஆயிரம் பவுண்டுகள் வரையில் சேமிப்பதாகவும் கூறியுள்ளனர்.

கனவு வாழ்க்கையை வாழ்வதாக

லண்டனின் புல்ஹாம் பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் 35 வயதான டிம் சுந்தர்லேண்ட் மற்றும் அவரது வருங்கால மனைவி 33 வயதான சாலி பிடல். இவர்கள் தங்கள் புதிய ஸ்டுடியோ பிளாட்டை கைவிட்டு தற்போது தெற்கு ஸ்பெயினில் நெர்ஜா பகுதியில் குடியேறியுள்ளனர்.

 

அதிகரிக்கும் வாழ்க்கை செலவு, தெருச்சண்டைகள், கத்திக்குத்து சம்பவங்கள் என லண்டனில் நிம்மதியாக வாழ்வது என்பது நாளும் அச்சுறுத்தலாகவே இருந்தது என்கிறார்கள் இவர்கள். மட்டுமின்றி, டிம் தெரிவிக்கையில், தமது நெருங்கிய நண்பர் ஒருவர் கொள்ளையர்களிடம் சிக்கி, அவரது கடை சூறையாடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிம் கூட தமது தொழிலை இணைய மூடாக முன்னெடுக்கவும் முடிவு செய்து, மார்ச் மாதம் கடையை மூடிவிட்டார். இதன்மூலம் தொழில் பாதிப்பு இல்லை என்பது மட்டுமின்றி, எந்த நாட்டிலும் குடியேறலாம் என்ற நிலைக்கு டிம் வந்துள்ளார்.

மட்டுமின்றி, தற்போது பகல் 8 மணி முதல் இரவு 9 மணி வரையில் வேலையை கவனித்தால் போதும் என்கிறார் டிம். மட்டுமின்றி, ஸ்பெயினில் குடியேறிய பின்னர், மாதம் 1000 பவுண்டுகள் வரையில் தங்களால் சேமிக்க முடிகிறது என குறிப்பிட்டுள்ள இந்த தம்பதி, லண்டனில் இருந்து வெளியேறிய பின்னர், இதுவரை 3,000 பவுண்டுகள் வரையில் சேமித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவரும் தொழிலில் அதிக ஈடுபாடுடன் செயல்படவும் முடிகிறது என கூறுகின்றனர். லண்டனில் குடியிருக்கும் போது ஒவ்வொரு 2 மணிக்கும் ஒருமுறை பொலிஸ் வாகனங்களின் சத்தம் கேட்கும் நிலை இருந்தது எனவும், ஆனால் தற்போது இந்த மூன்று மாதங்களில் வெறும் 2 முறை மட்டுமே கேட்டுள்ளதாகவும் டிம் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை செலவும் மிக மிக குறைவு

லண்டனில் இருந்து வெளியேற முடிவு செய்து, தங்கள் வீட்டை காலி செய்யும் நாளில், எங்கள் தெருவில் ஒரு சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்கானான். நடைபாதையில் எங்கும் ரத்தக்கறை, என்னால் அதை மறக்க முடியவில்லை என்கிறார் டிம்.

லண்டனை ஒப்பிடுகையில் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் வாழ்க்கை செலவும் மிக மிக குறைவு என்கிறார் டிம். லண்டனில் சொந்தமாக தங்களுக்கு வீடு இருந்தது. தாங்கள் குடியிருந்தது போன்ற ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதென்றால் மாதம் 2,300 பவுண்டுகள் வரையில் செலவாகும்.

லண்டனில் பாதுகாப்பில்லை... வெளிநாட்டில் குடியேறி, கனவு வாழ்க்கை வாழ்கிறோம்: தம்பதி நெகிழ்ச்சி | London Unsafe And Are Now Living The Dream

ஆனால் தற்போது அதை விட தரமான ஒடு குடியிருப்பு வெறும் 1,700 பவுண்டுகளுக்கு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் டிம் தம்பதி தெரிவித்துள்ளனர். பிரெக்ஸிட் மற்றும் புதிய விதிமுறைகள் காரணமாக, டிம் ஒரே நேரத்தில் 180 நாட்களில் 90 நாட்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் மண்டலத்தில் இருக்க முடியும்.

அதாவது தொடர்ந்து 3 மாதங்கள் மட்டுமே ஸ்பெயினில் தங்க முடியும், பின்னர் வெளியேறி, இன்னொரு 90 நாட்களுக்கு திரும்ப முடியாது. இந்த 90 நாட்களும் மாண்டினீக்ரோ பகுதியில் தங்குகிறார்கள், அதன் பின்னர் மீண்டும் ஸ்பெயின்.

ஆனால் ஸ்பெயினில் நீங்கள் வருவாய் ஈட்டுவதாக நிரூபித்தால், விசா கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்கிறார் டிம்