ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆட்டங்காட்டிய இலங்கை அணி!

0
128

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலங்க 91 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் ஃபரீத் ஹகமட் 43 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், பசல்ஹக் பரூக்கி 58 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 17 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது ஆப்கானிஸ்தான் அணி 269 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட தயாராகவுள்ளது.