அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி ஒருத்தியைத் தத்தெடுத்ததைத் தொடர்ந்து அவர்களுடைய வாழ்வில் சந்தித்த பயங்கர சம்பவங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பகிர்ந்துவருகிறார்கள்.
தத்தெடுத்த மகளை குளிக்கவைக்க அழைத்துச் சென்ற தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி
அமெரிக்காவின் இண்டியானாவைச் சேர்ந்த மைக்கேல் மற்றும் கிறிஸ்டின் (Michael and Kristine Barnett) தம்பதியர், நட்டாலியா கிரேஸ் (Natalia Grace) என்னும் ஆறு வயதுடைய உக்ரைன் நாட்டுச் சிறுமியை தத்தெடுத்துள்ளனர்.
நட்டாலியா பார்ப்பதற்கு சற்றே வித்தியாசமாக காணப்பட்டாலும், அபூர்வ எலும்பு பிரச்சினை கொண்டதால் அவள் அவ்வாறு காட்சியளிப்பதாக மைக்கேல், கிறிஸ்டின் தம்பதியர் எண்ணியுள்ளனர்.

குழந்தையைத் தத்தெடுத்த அன்று, ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளது அந்தக் குடும்பம். அப்போது, மகளைக் குளிக்கவைப்பதற்காக குளியலறைக்கு அழைத்துச் சென்றுள்ளார் கிறிஸ்டின்.
சிறிது நேரத்தில் அவர் சத்தமிட்டு அலற, ஓடோடிச் சென்ற மைக்கேல் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சிறுகுழந்தை என்று எண்ணிய நட்டாலியாவின் உடல், முழுமையாக வளர்ச்சியடைந்த, பருவம் எய்திய ஒரு இளம்பெண்ணின் உடல் போல் காணப்பட்டுள்ளது.
பாலுறுப்புகளில் முழுமையாக உரோமம் வளர்ந்திருக்க, ஆறு வயதுக் குழந்தைக்கு இது எப்படி சாத்தியமாகும் என குழம்பிப் போய் நின்றிருக்கிறார்கள் தம்பதியர்.
மற்றொரு அதிர்ச்சி
பிள்ளைக்கு ஏதோ விபரீதப் பிரச்சினை என எண்ணிய மைக்கேல், கிறிஸ்டின் தம்பதியர், அப்போதும் நட்டாலியாவை அன்புடன் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஒருநாள், கிறிஸ்டின் மற்றொரு காட்சியைக் கண்டுள்ளார். நட்டாலியாவின் உள்ளாடைகளில் இரத்தக்கரை இருக்க, அவளிடம் என்ன நடந்தது என பெற்றோர் விசாரிக்க, மிகவும் அலட்சியமாக, ஆமாம், எனக்கு மாதவிடாய் வரும், அதை நான் மறைத்துவிட்டேன் என நட்டாலியா கூற, அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள் தம்பதியர்.

Image: Investigation Discovery
மருத்துவப் பரிசோதனையில் நட்டாலியா ஆறு வயதுச் சிறுமி அல்ல, அவள் 22 வயது இளம்பெண் என்பது தெரியவந்துள்ளது.
பிறகு, தொடர்ச்சியாக, தம்பதியரை விஷம் வைத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்ய நட்டாலியா முயன்றதாகத் தெரிவிக்கும் அவர்கள், அவளை விட்டு விட்டு கனடாவுக்குச் சென்றுவிட, தன்னை தன் பெற்றோர் கைவிட்டுவிட்டதாக நட்டாலியா பொலிசில் புகாரளிக்க, தம்பதியர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

பின்னர் உண்மை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்பட, நடந்த அதிரவைக்கும் நிகழ்வுகளை தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தெரிவித்து வருகிறார்கள் மைக்கேலும் கிறிஸ்டினும்.
சோகம் என்னவென்றால், இப்போது மைக்கேல், கிறிஸ்டின் தம்பதியர் பிரிந்துவிட்டார்கள், நட்டாலியாவோ, மற்றொரு குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறாள்.
