உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தில் ரகசிய நடைமேடை தளம்!

0
215

உலகின் மிகப்பெரிய ரயில் நிலையமான நியூயார்க் ரயில் நிலையத்தில் மொத்தம் 44 நடைமேடைகள் காணப்படுவதுடன் மொத்தம் 44 ரயில்கள் ஒரே நேரத்தில் இங்கு நிற்க முடியும்.

மேலும், இங்கு நாளாந்தம் சராசரியாக 660 மெட்ரோ ரயில்கள் செல்கின்றன. 125,000 பயணிகள் இந்த ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றனர். இந்த ரயில் முனையத்தில் இரண்டு அண்டர் கிரவுண்ட் நிலைகள் காணப்படுகின்றன.

இதேவேளை, 41 தடங்கள் மேல் மட்டத்திலும் 26 தடங்கள் கீழ் மட்டத்திலும் செல்கின்றன. இந்த நிலையம் 48 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளதுடன் இரகசிய நடைமேடை தளமும் கட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தில் ரகசிய நடைமேடை தளம்! | Secret Platform In World S Largest Railway Station

இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக இந்த நடைமேடைக்கு வந்து தனது பயணத்தை மேற்கொள்ளவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் டிராக் 61 என்று அழைக்கப்படும் அந்த நடைமேடை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் ரயில் நிலையம் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.