கிளிநொச்சியில் இளம் மனைவியின் முகத்தை சிதைத்த கணவன்!

0
79

கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட இளம் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  தலைமறைவான கணவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று இரவு  இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேலதிக சிகிச்சை

இளம் மனைவியின் கண்களையும் குறிவைத்து கணவன் கடுமையாக தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இளம் மனைவியின் முகத்தை சிதைத்த கணவர்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Brutal Attack On Young Wife In Kilinochchi

குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக கணவனை பொலிசார் தேடிவருகின்றனர்.

அதேவேளை தாக்குதலுக்குள்ளான பெண் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்தவர் என கூறப்படும் நிலையில் பெண்ணின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.