கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் தம்பதியொன்று கோபுரத்தின் சுவரில் எழுதிய போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கோபுரத்தின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்த அதன் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளனர்.
தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு
இதனால் தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் வர்த்தக நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.