நியூயார்க் – மன்ஹாட்டன் சூரிய அஸ்தமனம்; வைரலாகும் புகைப்படங்கள்

0
189

வானளவு உயர்ந்த கட்டடங்களால் உலக அளவில் பெயர் பெற்றது அமெரிக்கா – நியூயார்க்கின் மன்ஹாட்டன்.

நேற்று மாலை மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சூரிய அஸ்தமன கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்ததுடன் தங்களின் கையடக்கத் தொலைபேசிகளில் அதனை பதிவு செய்துள்ளனர்.

நியூயார்க் - மன்ஹாட்டன் சூரிய அஸ்தமனம்; வைரலாகும் ல்புகைப்படங்கள் | New York Manhattan Sunset Photos That Go Viral

சமூக வலைத்தளங்களில் வைரல்

மன்ஹாட்டனின் வானளாவி உயர்ந்த கட்டடங்களுக்கு மத்தியில் பிரமாண்ட சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. சிவப்பு – செம்மஞ்சள் நிற வண்ணத்துடன் வானத்தில் பெரிய நெருப்பு பந்துபோல் சூரியன் கட்டடங்களுக்கு நடுவே கீழே சென்று கொண்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

நியூயார்க் - மன்ஹாட்டன் சூரிய அஸ்தமனம்; வைரலாகும் ல்புகைப்படங்கள் | New York Manhattan Sunset Photos That Go Viral

பூமி எப்போதும் நேராக சுழல்வது இல்லை. 23 டிகிரி அச்சில் சாய்வாகத்தான் சுழல்கிறது. இதனால் தான் நாம் பருவ மாறுதல்களை மாறி மாறி சந்திக்கிறோம். இவ்வாறு சாய்வாக சுழலும்போது உலக நாடுகளில் சில பகுதிகளில் சூரியனின் அஸ்தமனங்களும், உதயங்களும் பிரமாண்டமாக கண்கொள்ளாக் காட்சியாக அமைவது உண்டு என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே மாதிரியான மாதிரியான சூரிய அஸ்தமனம் ஜூலை மாதம் அங்கு மீண்டும் நிகழும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.