ஆடு வளர்ப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய அரசாங்கம்!

0
262

ஆடுகளுக்கு காப்பீடு வழங்க விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் டபிள்யூ. எம். எம். பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் விவசாய துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் குறித்த சபையின் தலைவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு கால்நடை முகாமைத்துவத்தில் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் 70,000 ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடுகளுக்கு காப்புறுதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி பொதுவாக ஒரு ஆடு ஒன்றின் மதிப்பு சுமார் 1 லட்சம் ரூபாய் என்றும், ஆடுகளுக்கு ஆண்டுக்கு 400 ரூபாய் காப்பீட்டுத் தொகையுடன் காப்பீடு செய்ய வாய்ப்பு வழங்கவும், ஆடுகள் திருடு போனாலோ, திடீரென இறந்தாலோ அதிகபட்ச இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆடுகளை இலவசமாக வழங்கும் ஏற்பாட்டிற்காக இந்த ஆண்டு 150 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.