முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் இருந்து பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா இழப்பீடு கோரி கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் அண்மையில் விமல் வீரவன்சவினால் எழுதி வெளியிடப்பட்ட புத்தகம் தனக்கும் இராணுவத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தே அவர் இழப்பீடு கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.
9 மறைக்கப்பட்ட கதை என்ற புத்தகத்தில் காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் உள்ள இரகசியங்களை அம்பலப்படுத்த அப்புத்தகம் எழுதப்பட்டதாக விமல் தெரிவித்திருந்தார்.
