திடீரென தாய்லாந்துக்கு பறந்த பிரதமர் தினேஷ்; என்ன காரணம் தெரியுமா!

0
214

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (31) காலை தாய்லாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் மேலும் 11 பேர் அடங்கிய குழுவினரும் தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் தாய்லாந்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட “சக்சுரின்” என்ற யானையை விசேட சரக்கு விமானம் மூலம் மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திடீரென தாய்லாந்துக்கு பறந்த பிரதமர் தினேஷ்; என்ன காரணம் தெரியுமா! | Prime Minister Dinesh Suddenly Flies To Thailand

அதன்படி கடந்த வருடம் தாய்லாந்து தூதரகம் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு யானை நல்ல நிலையில் இல்லை என்பதையும் அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அது மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொண்டது.

சி 130 விமானத்தில் யானையை ஏற்றுவதற்கான பொருத்தமான கூடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தாய்லாந்து அமைச்சர் பொருத்தமான விமானத்திற்காக காத்திருக்கின்றோம். விலங்கின் பாதுகாப்பிற்காக பொருத்தமான கூடு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தாய்லாந்துக்கான திடீர் விஜயம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.