உப்புநீரில் விளக்கெரியும் அம்மனுக்கு கடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இன்று!

0
199

வரலாற்று பிரசித்திபெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு கடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இன்றைய தினம் ஆரம்பமாகும் இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் மாலை சம்பிரதாய முறைப்படி கடல் தீர்த்தம் எடுப்பதற்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை – காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு கடற்தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உப்புநீரில் விளக்கெரியும் அம்மனுக்கு கடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு! | The Sea Cures The Goddess Lamp Salt Water

ஏழு நாட்கள் முள்ளியவர் காட்டா விநாயகர் ஆலத்தில் அம்மன் சந்நிதானத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி இடம்பெற்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காட்டா விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து ஏழாவது நாளான எதிர்வரும் திங்கட்கிழமை தீர்த்தம் வற்றாப்பளை – கண்ணகி அம்மன் ஆலயம் கொண்டுசெல்லப்பட்டு, தொடர்ந்து வைகாசி பொங்கல் விழா நடைபெறும்.

மேலும் முள்ளியவளை – காட்டா விநாயகர் ஆலயத்தில் தொடர்ச்சியாக ஏழு நாட்களும் கடல் நீரில் விளக்கு எரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.