ஈரானுக்கு 50 ஆண்டுகள் தடை விதிக்க ஜெலென்ஸ்கி கோரிக்கை!

0
117

ஈரானுக்கு 50 ஆண்டுகளுக்கு தடை விதிக்குமாறு உக்ரைன் நாடாளுமன்றத்திடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி ஈரானிய வர்த்தகம், முதலீடுகள் அதேபோல் பரிமாற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் உக்ரைனில் இருந்து ஈரானிய சொத்துக்களை திரும்பப் பெறுவது ஆகியவையும் உள்ளடங்கும் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் நாடாளுமன்றம் சட்டமாக்குவதற்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இருப்பினும் நாடாளுமன்றம் இன்னும் வாக்கெடுப்பை திட்டமிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஈரான் தொடர்ச்சியாக ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையிலேயே தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.