ஒவ்வொருவருக்கும் 1,000 அமெரிக்க டாலர்; பரிசு வழங்கி அசத்திய அமெரிக்க கோடீஸ்வரர்!

0
227

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க கோடீஸ்வரர் ராபர்ட் ஹேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதன்போது பட்டம் பெற்ற 2 ஆயிரத்து 500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா ஆயிரம் டாலர் பரிசாக அவர் வழங்கினார்.

ஒவ்வொருவருக்கும் 1,000 அமெரிக்க டாலர்; பரிசுவழங்கி அசத்திய அமெரிக்க கோடீஸ்வரர்..! | 1 000 Usd Each Billionaire Rob Hale Surprised

மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் Granite Communications நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் ஹேல் பங்கேற்று சிறப்புரையாற்றி பட்டம் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

அதோடு பட்டதாரி மாணவர்களுக்கு தலா 500 டாலர் கொண்ட இரு கவர்களை பரிசாக வழங்கினார். அந்த கவர்களில் ஒன்றில் கிப்ட் என்றும் மற்றொரு கவரில் Give என்றும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.