டொலரின் பெறுமதி 400 – 450 ரூபாவிற்கு செல்லுமா..! தடை நீக்கப்பட்டால் ஏற்படும் மாற்றம்

0
131

கடந்த வாரம் முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.

அதன்படி (26.05.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி நேற்றைய தினம் டொலரின் கொள்வனவு விலையானது 295.63 ரூபாவாகவும், விற்பனை விலையானது 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் நேற்றைய நிலவரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி (24.05.2023)ஆம் திகதிக்கான நிலைமையை ஒப்பிடும்போது (25.05.2023) அன்றைய தினம் மேலும் அதிகரித்திருந்தது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று முன் தினத்திற்கான நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் டொலரின் பெறுமதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்திருந்தது, 371 ரூபாவாக அதன் விற்பனை பெறுமதியும், கொள்வனவு பெறுமதி 370 ரூபாவையும் அண்மித்திருந்தது.

இந்தநிலை, இவ்வருடம் பெப்ரவரி மாதம் வரையில் நீடித்திருந்தது.

இந்த மாற்றமானது கழுத்தை நெரிக்கும் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு ஓரளவேனும் மூச்சுவிடக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டொலரின் பெறுமதி 400 - 450 ரூபாவிற்கு செல்லுமா..! தடை நீக்கப்பட்டால் ஏற்படும் மாற்றம் | Us America Dollar In Sri Lanka

இதேவேளை மீண்டும் டொலரின் பெறுமதியானது குறையத் தொடங்கியுள்ளது.

எனினும் இதன் பலன் எவ்வாறு மக்களுக்கு கிடைக்கிறது கிடைக்கப் போகிறது என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயம்.

டொலர் வீழ்ச்சியின் பலாபலன்கள்

அண்மையில் இலங்கை ஐக்கிய தொழில் முயற்சியாளர் சங்கத்தின் தலைவி டானியா எஸ்.அபேசிங்க ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கையில், டொலர் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதும், அதன் பலாபலன்கள் இன்னும் மக்களுக்கு கிட்டவில்லை.

டொலரின் பெறுமதி 400 - 450 ரூபாவிற்கு செல்லுமா..! தடை நீக்கப்பட்டால் ஏற்படும் மாற்றம் | Us America Dollar In Sri Lanka

கடந்த காலங்களில் இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆயினும் அதற்கேற்ப தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை.

மறுபுறத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுப் பொருட்களுக்கான விலையும் குறையவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

நிதி அமைச்சு தரப்பின் நிலைப்பாடு

அதேநேரம் மக்களுக்கு பலனை வழங்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

இவர் கூறுகையில், டொலரின் பெறுமதி குறைவடையும் போது பொருட்களின் விலைகளும் நியாயமான முறையில் விதிக்கப்பட வேண்டும்.

சந்தையில் 75 வீதமான பொருட்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவை அல்லது இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வர்த்தக மற்றும் கொள்கை அமுலாக்கல் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து தற்போதைய நாட்களில், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

டொலரின் பெறுமதி 400 - 450 ரூபாவிற்கு செல்லுமா..! தடை நீக்கப்பட்டால் ஏற்படும் மாற்றம் | Us America Dollar In Sri Lanka

டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு அமைய, சந்தையில் அத்தியாவசிய பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதா என்பது ஆராயப்படுகிறது.

அவ்வாறு விலை குறைவடையாவிட்டால், அது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது டொலரின் விலையில் பதிவாகும் வீழ்ச்சியானது நிரந்தரமற்ற ஒரு மகிழ்ச்சி எனவும், விரைவில் டொலரின் பெறுமதி மாபெரும் அதிகரிப்பை சந்திக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் பலர் எச்சரிக்கைகள் விடுத்து வருவதையும் மறுக்க முடியாது.

இலங்கையில் இறக்குமதியின் போது ஏற்படும் மாற்றம்

டொலரின் பெறுமதி 400 - 450 ரூபாவிற்கு செல்லுமா..! தடை நீக்கப்பட்டால் ஏற்படும் மாற்றம் | Us America Dollar In Sri Lanka

அதன்படி அண்மையில் நாட்டில் கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ள போதும், டொலர் ஒன்றின் பெறுமதி 400 – 450 ரூபாவிற்கு செல்லும் சாத்தியம் இருப்பதாக குளோபல் ஸ்ரீலங்கா மன்றத்தின் தலைவர் மஞ்சு நிஷங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சீர்குலைந்த நிலையிலுள்ள பொருளாதாரம் சற்று முன்னேறிக் காணப்படுவதாகவும், அதனை மீட்டெடுத்து சுதந்திரமாக இலங்கைக்கு வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே டொலரின் பெறுமதி உயரும் நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் பொருளாதாரம் சிதைந்த நிலையில் தற்போது டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக காணப்படுவதாகவும், அது மீளும் போது டொலரின் பெறுமதி அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.