உயர்தர விடைத்தாள் மதிப்பீடுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் கடும் நெருக்கடி..

0
192

உயர்தர விடைத்தாள் மதிப்பீடுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் பரீட்சை திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடி அதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பத்தொன்பதாயிரம் ஆசிரியர்கள் மதிப்பீட்டுக்காகக் கோரிய முன்பணத்தை இதுவரை திணைக்களத்தினால் செலுத்த முடியவில்லை.

ஒரு பகுதியினருக்கு மட்டுமே முன்பணம் செலுத்த முடிந்தது. முன்பணம் பெறாதவர்கள் நேற்று (26) மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகினர்.

முற்பணம் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் இவர்கள் மீண்டும் மதிப்பீடுகளுக்காக இணைந்துள்ளனர்.

ஆனால் முன்பணம் வழங்க, துறையிடம் பணம் இல்லை என குறித்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அறுபத்து மூன்று பாடங்களுக்கான மதிப்பெண் நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு பன்னிரெண்டு பாடங்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த போதிலும் இதுவரை அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் நடைமுறைகள் தயாரிக்கப்படவில்லை அல்லது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.