வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? O/L படித்த பத்திரிகையாளரின் ஆலோசனை

0
247

வடக்கு மாகாண ஆளுநராக தற்போது பதவியேற்று உள்ள பி.எஸ்.எம். சாள்ஸிற்கு P.S.M Charles இணைப்புச் செயலாளராக யாரை போடுவது என ஓஎல் படித்த ஊடகவியலாளர் ஒருவர் ஆலோசனை வழங்க ஆரம்பித்துள்ளார்.

ஏற்கனவே வடக்கு மாகாண ஆளுநராக இருந்த பி.எஸ்.எம் சாள்ஸ் தனது காலத்தில் குடும்ப உறுப்பினர்களை இணைப்புச் செயலாளர், பிரத்தியோகச் செயலாளர், ஊடக இணைப்பாளர் என பல்வேறு பதவி நிலைகளில் அமர்த்திய நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தினால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

வடமாகாண ஆளுநராக பதவியேற்ற நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் பதவி நிர்வாக நீதியான மற்றும் தனிப்பட்ட பதவி நிலைகளை வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு பதவி நிலைகளை வழங்குவதற்கு முன்னேற்பாடாக ஓஎல் படித்த ஊடகவியலாளர் ஒருவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக சிலரின் பெயர்களை முன்மொழிந்துள்ளாராம்.

குறித்த ஊடகவியலாளர் ஏற்கனவே பத்திரிகை நிறுவனம் ஒன்றில் செய்தி களவெடுத்த பிறிதொரு ஊடக நிறுவனத்திற்கு வழங்கியது மட்டுமல்ல குறித்த செய்தியும் தவறு என்பதற்காக ஒரு நாள் சிறையிலும் இருந்துள்ளார்.

வடமாகாண ஆளுநரின் இணைப்பு செயலாளர் யார்? O/l படித்த ஊடகவியலாளரின் ஆலோசனை | Secretary The Northern Province Governor Charles

அதுமட்டுமல்லாது அவர் சார்ந்த அரசியல் கட்சி ஒன்றின் முக்கிய பதவியில் உள்ள ஒருவரின் கோப்புக்களை திருடிச் சென்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது.

அது மட்டுமல்லாது வடமாகாணத்தில் வெளிநாட்டு நீண்டகாலத் திட்டங்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதனை சீனாவின் திட்டம் என எழுதினால் தனக்கு ஊதியம் வழங்காதபத்திரிகை ஒன்றின் முன் பக்கத்தில் எழுதுவதற்கு தூதரகம் ஒன்று பணம் வழங்குவதாக அறியவருகிறது.

இவையெல்லாம் இவ்வாறு இருக்க ஆளுநரின் இணைப்புச் செயலாளராக யாரைப் நியமிப்பது என்பது தொடர்பில் குறித்த நபர் அதிகம் ஆர்வம் படுவதற்கு காரணமும் உள்ளது.

ஆளுநரை வடக்கிற்கு நியமிப்பதில் ஜனாதிபதிக்கு சம்மதம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த நபருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதோடு தனது செய்திகளை போடுவதற்கு ஒரு தொகைப் பணத்தையும் மாதங்களாக சேர்த்து வழங்கி வருகிறார்.

ஆளுநர் பதவியேற்ற நாளிலிருந்து இவரது அலப்பறை தாங்காமல் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சில வேளைகளில் தொலைபேசியை ஓப் செய்து வைக்கிறாராம்.

ஏன் குறித்த நபர் ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இவரை போட்டால் நல்லா இருக்கும் என கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது வேலை செய்யும் பத்திரிகையில் சம்பளம் இல்லை வேற பத்திரிகைகளுக்கு செல்ல முடியாது ஏற்கனவே திருட்டு கூட்டங்களுக்கு செல்ல முடியாது நேரமில்லையாம்.

ஆகையால் தனக்கு சார்பான ஒருவரை நியமித்தால் கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து அனுப்புவதற்கு ஏதுவாக இருக்கும் என நம்புகிறார்.

அவ்வாறே குறித்த நபர் வழங்கிய ஆலோசனைப்படி ஒருவர் நியமிக்கப்பட்டால் ஆளுநர் அலுவலகம் சந்தி சிாிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதோடு குறித்த பத்திரிகையில் பொய் புளுட்டுக்கள் வராது சில வேளை உண்மை செய்திகளும் வெளிவர வாய்ப்புள்ளது.