உணவு கொடுத்த சிறுமி… பதிலுக்கு மான் செய்த செயல்; அசந்து போன நெட்டிசன்கள்! (video)

0
45

உணவு கொடுத்த சிறுமிக்கு ஒரு மான் தலைகுனிந்து மரியாதை செலுத்திய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிறுமிக்கு மரியாதை செலுத்திய மான்

சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் மற்றும் விலங்குகளுடன் வீடியோக்களைப் பார்த்தாலே நெட்டிசன்களுக்கு மகிழ்ச்சிதான் கொடுக்கும். குழந்தைகளின் சில வீடியோக்கள் நம்மைச் சிரிக்கவும் வைத்துவிடும்.

ஜப்பானியர்கள் எப்போதும் யாரையாவது சந்தித்தால், ஒருவரையொருவர் வாழ்த்துவது, அவர்களுக்கு தலை குனிந்து மரியாதையும், நன்றியையும் செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதேபோல், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,

ஜப்பானின் நாராவில் ஒரு சிறுமி மிருகக் கண்காட்சியில் மானைப் பார்க்கிறாள். வேலிக்குள் பெரிய கொம்புகள் கொண்ட மானுக்கு அச்சிறுமி உணவு கொடுக்கிறார்கள்.

அப்போது, அந்த மான் அச்சிறுமிக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் தன் தலையை குனிந்து நிமிர்கிறது. இதைப் பார்த்த அச்சிறுமி மானுக்கு உணவை கொடுத்துவிட்டு பதிலுக்கு அவளும் மானுக்கு மரியாதை செலுத்துகிறாள். ஒருவருக்குக்கொருவர் திரும்பத் திரும்ப மரியாதை  செலுத்திக் கொண்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆஹா… என்ன ஒரு அழகான தருணம். இதைப் பார்த்து என் மனம் மகிழ்கிறது. விலங்குகளுக்கு கூட நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை இந்த சிறுமி எடுத்துக் காட்டுகிறாள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

click here to watch video- https://twitter.com/TheFigen_/status/1661060673432961026