தாய்லாந்தினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட சக் சுரின் என்ற யானையின் வாழ்க்கை நிலமை மோசமாகவுள்ளதனால் மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து நாட்டிற்க்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதியன்று சக் சுரின் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.
இதற்காக புதிய கூண்டு கட்டப்பட்டு, விமான ஏற்பாடுகள் முடிந்த பிறகு, ரஷ்ய விமானம் ஒன்றில் புறப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், சக் சுரின் என்ற வயதான ஆண் யானைக்கான கூண்டு உட்பட அனைத்தும் தற்போது தயாராகிவிட்டதாக தாய்லாந்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சனா சில்பா ஆர்ச்சா தமது முகப்புத்தக பதிவில் வெளியிட்டுள்ளார்.
மருத்துவக்குழு பரிந்துரை
முன்னதாக நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தாய்லாந்து கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வந்தடைந்திருந்துள்ளது.
இதன்போது சங்கிலியால் பிணைக்கப்பட்டு சடங்குகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் இந்த யானை நோய்வாய்ப்பட்டதாக குறித்த மருத்துவக்குழு கண்டறிந்து, அதனை சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் பரிந்துரையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.