யாழ் விதவைப் பெண்ணை வதைத்துக்கொலை செய்த கிழக்கு பிரதேச வாதிகள்!

0
52

அது கருணா விதைத்துவிட்டிருந்த கிழக்கு பிரதேசவாதம் தலைவரித்தாடிக் கொண்டிருந்த காலகலட்டம். மட்டக்களப்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் நடமாடித் திரிந்து கொண்டிருந்தார்கள்.

கருணா குழுவினரோ வெலிகந்தைப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா இராணுவத்தினருரின் முகாம்மகளிலும் முகாம்களை அணடிய பிரதேசங்களிலும் களம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

யாழ் விதவைப் பெண்ணை வதைத்துக்கொலை செய்த கிழக்கு பிரதேசவாதிகள்! | Eastern Regionalists Tortured Killed Jaffa Widow

 காடையர்களின் ஜனநாயக அரிதாரம்

இன்றைக்கு ஜனநாயக அரிதாரம் பூசிக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பிள்ளையான், சித்தா, யோகன், இந்துஜன், மார்க்கன், மங்களன், சின்னத்தம்பி, இனிய பாரதி, சீலன் போன்ற பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று ஒரு கூலிப்படையை விட கேவலமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தால் யாழ்பாணத்தைச் சேர்ந்த அந்த விதவைப் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

யாழ் விதவைப் பெண்ணை வதைத்துக்கொலை செய்த கிழக்கு பிரதேசவாதிகள்! | Eastern Regionalists Tortured Killed Jaffa Widow

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை என்ற கிராமத்தில் இரண்டு சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சுதா என்ற இளம் விதவை இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் 

கருணா குழு என்றும் பிள்ளையான் குழு என்றும், ரீ.எம்.வி.பி. என்றும் அழைக்கப்பட்ட குழுவே அந்தப் படுகொலையைச் செய்ததாக அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது.

அந்தப் பெண் பிள்ளையானின் சகாவான மங்களன் மாஸ்டர் என்பவரால் கடத்திச் செல்லப்பட்டு தீவுச்சேனையில் இருந்த ரீ.எம்.வி.பி. முகாமில் வைத்து 5 காடையர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாதாக இணையத்தளங்களில் செய்தியும் வெளியாகியிருந்தன.

அந்தப் பெண்ணை கடத்திச் செய்யமுற்பட்டபோது அந்த கடத்தலைத் தடுக்கச் சென்ற ரவீந்திரன் என்பவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.