குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கூடைப்பந்து விளையாடிய கனடிய போலீசார்

0
43

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சட்பரி பகுதியில் வினோதமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அதிக அளவு சத்தம் எழுப்பப்படுவதாக போலீசாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது.

இந்த முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அந்த இடத்தில் சிறுவர்கள் கூடைப்பந்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததனை போலீசார் அவதானித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முறைப்பாடு செய்த நபர்களை அழைத்து பிள்ளைகள் இவ்வாறு விளையாட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் விளையாடும் போது ஓரளவு சத்தம் எழும் எனவும் போலீசார் விளக்கியுள்ளனர்.

பின்னர் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் இணைந்து பொலிஸாரும் கூடைப்பந்து விளையாடி உள்ளனர்.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் பிறந்தநாள் எனவும் பிறந்தநாள் பரிசாக கிடைக்கப்பெற்ற கூடைப்பந்து வலையைக் கொண்டு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டை விசாரணை செய்ய சென்ற பொலிஸார் அவர்களுடன் இணைந்து விளையாடி சிறுவனையும் வாழ்த்திச் சென்றுள்ளனர்.