கனடாவில் பட்டம் பெற 54 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட 71 வயது மாணவர்!

0
45

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பட்டப் படிப்பை பூர்த்தி செய்வதற்கு 54 ஆண்டு காலம் எடுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆர்தர் ரொஸ் (Arthur Ross) என்ற நபரை இவ்வாறு பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் இம்முறை நடைபெற்ற கனடாவில் பட்டமளிப்பு விழாவில் ரொஸ் பட்டம் பெற்றுக் கொண்டார்.

1969 ஆம் ஆண்டு ரொஸ் பட்டப் படிப்பிற்காக தெரிவாகி இருந்தார். தொழில் காரணமாக நீண்ட காலமாக பட்டப்படிப்பை தொடர முடியாது இருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பகுதி நேர அடிப்படையில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார்.

கோவிட் பரவுகை காலத்தில் தொழில்நுட்ப வசதியுடன் ஏனைய மாணவர்களை போன்று தாமும் கற்கை நெறியை பூர்த்தி செய்ததாக தெரிவிக்கின்றார்.

ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் பல்கலைக்கழகத்தில் இந்த பட்டத்தை பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

நீண்ட இடைவெளியின் பின்னர் 2021 ஆம் ஆண்டு வகுப்பறை கல்விக்கு மீண்டும் திரும்பியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர்கள் சக மாணவர்கள் பல்கலைக்கழக பணியாளர்கள் அனைவரும் தமக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் ரொஸ் தெரிவிக்கின்றார்.

இணைய வழியிலும் நேரடி வகுப்பறையிலும் கற்றல் அனுபவங்களை பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது மாணவி ஒருவரின் மகன் தனது வகுப்பு தோழியான சுவாரசியமான சம்பவம் இந்த கற்றல் அனுபவத்தில் உண்டு என அவர் குறிப்பிடுகின்றார்.