இலங்கையின் முதல் தமிழ் திரைப்பட நட்சத்திரம் காலமானார்

0
42

இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான வெண் சங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்த மூத்த கலைஞர் திரு சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் நேற்றையதினம் (24) வயது மூப்பு காரணமாக யாழ் கந்தர் மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

இவர் கடந்த 26.10.1936 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை சித்தங்கேணியில் பிறந்து யாழ்ப்பாணம் – கந்தர் மடத்தடியில் வசித்து வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இவரது திரையுலக பயணம் இலங்கை தமிழ் திரையுலகில் ஒரு புதிய அத்திவாரமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்பட பிரபலம் மரணம் | Sri Lankas First Tamil Film Star Dies