மலையகம் மற்றும் ஏனைய பகுதிகளில் 1958ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெருமளவான குடும்பங்கள் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் இவர்கள் இலங்கையில் தொடர்ந்த போரின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை வீட்டுத்திட்டங்கள் இல்லாமலும், சொந்தக் காணிகள் இல்லாமலும் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக இவ்வாறான குடும்பங்களுக்கு காணிகள், வீடுகள் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படாத நிலையே காணப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
சுதந்திரபுரம் பகுதியில் மூத்த அரசியல்வாதியான ஆனந்த சங்கரிக்கு சொந்தமான காணியில் 18க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் குறித்த காணிகளை அந்த குடும்பங்களுக்கே அவர் வழங்கியதையும் நினைவுபடுத்தி நன்றி தெரிவிக்கின்றன பயனடைந்த குடும்பங்கள்.
எனவே மலையகத்திலும் கஷ்டங்களுக்கு உள்ளாகி வடக்கிற்கு இடம்பெயர்ந்து அங்கேயும் பெரும் துயரங்களை அனுபவிக்கும் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பது உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பொறுப்பல்லவா?
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் அறிக்கை…