உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கிய ஜப்பான்!

0
46

ஜப்பான் தற்காப்புப் படைகள் உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கியுள்ளன.

கடந்த வாரம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டின் போது உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உறுதியளித்திருந்தார்.

அதன் ஒரு பகுதியாக, தற்போது உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது டோக்கியோவில் உள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜப்பானுக்கான உக்ரைன் தூதர் Sergiy Korsunsky அந்த வாகனங்களை பெற்றுக் கொண்டார்.