சம்பந்தரை சந்தித்த கிழக்கின் ஆளுநர்

0
191

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தரை சந்தித்தார் கிழக்கின் ஆளுநர் | Governor Of East Met Sambandar