இலங்கையில் நடுக்காட்டில் திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள்

0
182

பதவிய – முல்முதே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார். 21.05.2023 அன்று இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.

பதவிய – புல்முடே வீதி, உறுவ பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் கொஹொம்பபிட்டிய ஏரியின் அடிவாரத்தில் தெப்பம் அமைக்கப்பட்டு மணமகன், மணமகள் அமரும் நாற்காலி என்பன காட்டில் கிடைக்கப்பெற்ற பொருட்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடுக்காட்டில் கோலாகலமாக இடம்பெற்ற திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள் | A Wild Wedding Forest Of Sri Lanka Photos Viral

300 உறவினர்களுடன் இடம்பெற்ற திருமணம்

திருமண நிகழ்வில் எவ்வித இசை கருவிகளும் பயன்படுத்தாது இயற்கையின் சத்தத்துடன் பாரம்பரிய உணவு வகைகள் பறிமாறப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நடுக்காட்டில் கோலாகலமாக இடம்பெற்ற திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள் | A Wild Wedding Forest Of Sri Lanka Photos Viral

இது குறித்து மணமகனின் தந்தை சமந்தா பிரேமலால் கூறுகையில்,

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளை உணர்ந்து உலகில் வாழும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நடுக்காட்டில் கோலாகலமாக இடம்பெற்ற திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள் | A Wild Wedding Forest Of Sri Lanka Photos Viral

அதேசமயம் திருமண நிகழ்வு காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திருமண நிகழ்வில் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 300 உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்நிலையில் குறித்த திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.  

இலங்கையில் நடுக்காட்டில் கோலாகலமாக இடம்பெற்ற திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள் | A Wild Wedding Forest Of Sri Lanka Photos Viral