பணியாளர் மீது சூடான காபியை வீசிய நபர்

0
212

கனடாவில் பிரபல ரெஸ்டுரண்ட் ஒன்றின் வாடிக்கையாளர், பணியாளர் மீது சூடான காபியை வீசி எறிந்துள்ளார்.

இதனால் குறித்த பெண் பணியாளர்களின் கைகள் மற்றும் உடலின் சில பகுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பணியாளருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சூடான காபியை பணியாளர் மீது வீசி எறிந்த நபரைத் தேடும் பொலிஸார் | Toronto Police Searching For Suspect

காபியை ஆடர் செய்த சந்தேக நபர் அதனை பணியாளர் மீது சுடச் சுட வீசி எறிந்துள்ளார். இதனால் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரையும் முன்னர் தப்பிச் சென்றுள்ளார்.

30 முதல் 35 வயது வரையில் மதிக்கத்தக்க ஐந்தடி எட்டு அங்குல உயரத்தையுடைய நபரே இவ்வாறு காபியை பணியாளர் மீது வீசி எறிந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.