முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்றவர்களை அச்சுறுத்தியவர்களை கைது செய்ய வேண்டும்

0
170

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய அராஜகக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

ஏன் இன்னமும் கைது செய்யவில்லை

கொழும்பு – பொரளையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வை குழப்ப முயன்றவர்களை அந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை ஏன் இன்னமும் கைது செய்யவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கும்பலின் நடவடிக்கை அரசின் ஆதரவுடன் நடைபெற்றதா? இந்த அராஜகத்தைப் புரிந்த குறித்த அமைப்பு மீது அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ராஜித வலியுறுத்தினார்.

மேலும் இப்படியான மோசமான நடவடிக்கைகளால் தான் நாட்டில் இன்னமும் இனவாதமும் மதவாதமும் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.