முடங்கியிருந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொருளாதார ஆய்வு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான திணைக்களத்தின் ஆலோசகர் கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவிகள் மூலம் இலங்கை இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு படிப்பினை
லண்டனில் உள்ள வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் அதிக கடனை சுட்டிக்காட்டி, தவறான பொருளாதார கொள்கையென விமர்சித்தனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு எச்சரிக்கையான படிப்பினைகளை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 50 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தாத நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை, ஒரு கடுமையான கொடுப்பனவுச் சமநிலை நெருக்கடி சூழல், பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியது. அதோடு 2022 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 7.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் செப்டம்பர் 2022ம் ஆண்டு 69.8 சமவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுவது தற்போது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் அடுத்த வருடம், மீண்டும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடந்த மாத முன்னறிவிப்பின் படி, 2023இல் 3.1 சதவீதமும், 2024ல், 1.5 சதவீதம் வளர்ச்சியும் குறைந்த பொருளாதாரச் சுருக்கத்தைக் குறிப்பதாக கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான திருத்தப்பட்ட பொருளாதார கொள்கை கொந்தளிப்பான அரசியல் சூழலை அமைதிப்படுத்துவதன் மூலம் அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு அடித்தளமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சாதாரண இலங்கையர்கள் தங்களது வாழ்க்கையை வாழ அனுமதித்துள்ளதாக பொருளாதார பேராசிரியர் கணேசன் விக்னராஜா மேலும் தெரவித்துள்ளார்.