வாஷிங் மிஷினில் வைத்து மகளைக் கொன்ற தந்தை: பரவும் பொய்யான செய்தி

0
183

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகளை சலவை இயந்திரத்தில் வைத்து கொலை செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியின் உண்மையின் தன்மை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு கத்தாரில் பேருந்து ஒன்றில் உயிரிழந்த நான்கு வயது குழந்தையின் புகைப்படங்களே இவ்வாறு போலியாக பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் நஜக்காவில் பேருந்தில் பயணித்த குறித்த சிறுமி பேருந்தின் கதவுகளைத் திறக்க முடியாமல் சிக்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டு வெலிகம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகளை கொலை செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது.

இந்த செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.