யாழில் காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்..

0
48

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் பகுதியில் காட்டுக்குள்ளிருந்து 65 கிலோ எடையுடைய கஞ்சா பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இ‍வை 26 கஞ்சா பொதிகள் அடங்கிய இரண்டு பெரிய மூடைகளாக காணப்பட்டன.

இந்த கஞ்சாப் பொதிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.