இலங்கையரின் பல கோடி ரூபா பெறுமதியான அம்பர், இந்தியாவில் பறிமுதல்..

0
272

இலங்கையருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பெறுமதியான அம்பர் இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 31.67 கோடி ரூபாய்க்கு விற்கப்பட இருந்த 18 கிலோ 100 கிராம் திமிங்கல வாந்தியுடன் 4 பேரை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

இலங்கையில் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாக கூறப்படும் அம்பர் எனப்படும் திமிங்கல வாந்தி விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தூத்துக்குடி – கேரளா பகுதிகளை சேர்ந்தவர்கள்

திமிங்கலங்களின் வாந்தியாகக் கருதப்படும் அம்பர், அதிக மதிப்புள்ள வாசனை திரவியங்கள் மற்றும் மருந்துகளைத் தயாரிக்க பயன்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி மற்றும் கேரளா பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆகும். சந்தேக நபர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 54 கோடி இந்திய ரூபா பெறுமதியான அம்பர் தென்னிந்திய பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.