சாலையில் நின்ற மோட்டார் சைக்கிளை பெற்றோல் ஊற்றி எரித்த பெண்!

0
68

டெல்லி – ஜெய்த்பூரில், பெண் ஒருவர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கள் ஒன்றிலிருந்து பெற்றோலை வெளியே எடுத்து, அதே வாகனத்தை தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு வாகனத்தை தீயிட்டு கொளுத்த முற்பட்ட போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக வெளியான சிசிரிவி காட்சிகளில், அந்த பெண் ஜெய்த்பூரில் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது தனது பார்வையை செலுத்தி நிற்கிறார்.

சுற்றியுள்ள பகுதிகளை நன்கு ஆராய்ந்த பின்னர், அங்கு நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து பெற்றோலை வெளியே எடுத்து, தீப்பெட்டி கொண்டு வாகனத்திற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து விலகி செல்கிறார்.

சாலையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை பெற்றோல் ஊற்றி எரித்த பெண்! பரபரப்பு சம்பவம் | Woman Poured Petrol On A Bike Standing On The Road

சம்பந்தப்பட்ட பெண் மற்றொரு வாகனத்திற்கு தீ வைக்க முயற்சிக்கும் போது, உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இருப்பினும் அந்த பெண் எதற்காக இத்தகைய சம்பவத்தை செய்தார் என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.