படப்பிடிப்புக்காக சாக்கடையில் விழும் சீன்..இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தது படுக்கையில் நடிகர் போண்டா மணி..

0
77

நடிகர் போண்டா மணி மகள் தற்போது 12ம் வகுப்பு முடித்துள்ள நிலையில், அவருக்கு ஐசரி கணேசன் மேல் படிப்பிற்கு உதவி செய்துள்ளார்.

நடிகர் போண்டா மணி

தமிழ் சினிமாவில் கொமடி நடிகராக வலம் வந்த போண்டா மணி, வடிவேலு, விவேக் உட்பட பல கொமடி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட போண்டா மணி சென்னை மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சை எடுத்து வந்தார்.

இதுகுறித்து பேசிய போண்டா மணி, தற்போது ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபத்தில் படப்பிடிப்பில் சாக்கடையில் விழும் சீன் எடுக்கப்பட்ட போது, அதனை தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்று நிஜ சாக்கடையில் என்னை விழ வைத்தனர்.

அந்த சாக்கடை தண்ணீர் எனது நுரையீரலுக்குள் சென்றதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பொழுது தான் தனது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்துள்ளது என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் போண்டா மணி மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! 12ம் வகுப்பு மதிப்பெண் என்ன தெரியுமா? | Bonda Mani Daughter 12 Th Mark

தற்போது இவரது மகள் 12ம் வகுப்பு முடித்து, மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார். அடுத்து மேல் படிப்பிற்கு கல்லூரியில் சேர்வதற்கு, ஐசரி கணேசன், அவருடைய வேல்ஸ் கல்லூரியில் என்ட்ரன்ஸ் கட்டணம், அட்மிஷன் கட்டணம் கூட வாங்காமல் இவரது மகளுக்கு bcs படிக்க சீட் கொடுத்துள்ளார்.

நடிகர் போண்டா மணி இப்படியொரு நல்ல மனிதர் தெய்வத்திற்கு சமம். இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என்று உருக்கத்துடன் பேசியுள்ளார்.