அகதிகள் முகாமில் பிறந்த இளம்பெண் படைத்த சாதனை!

0
242

ஆப்பிரிக்காவின் கென்யாவிலுள்ள அகதிகள் முகாமில் பிறந்து, அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்ற இளம்பெண் சாதனையும் அனைவரும் பாராட்டு வருகின்றனர்.

அகதிகள் முகாமில் பிறந்த பெண்

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை சேர்ந்த ஹம்டியா அஹ்மத் என்ற 24 வயது பெண், கென்யாவிலுள்ள அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்துள்ளார்.

தொடர்ந்து 7 ஆண்டுகள் அங்கே வாழ்ந்த அவர் பின்னர் அங்கிருந்து பயணித்து, பல இடர்பாடுகளை கடந்து தற்போது அமெரிக்காவில் படித்து முதுகலை பெற்றுள்ளார்.

சமீபமாக இவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை, ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் “ கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்நாட்டு போரிலிருந்து தப்பிய போது அவரது தாயார் தன்னை பெற்றெடுத்ததாகவும், அவளுடைய பெற்றோர் பணமில்லாமல் அமெரிக்காவிற்கு சென்றதாகவும், அப்போது அவர் தன் குழந்தைகளுக்காக பல தியாகங்கள் செய்திருக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

வலிமையான பெண்ணின் வரையறை

மேலும் அவர் தனது படிப்பாக பண உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது தாயை ‘ ஒரு வலிமையான பெண்ணின் வரையறை’ என்றும், தாயின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக கூட எழுதலாம் எனவும் கூறியுள்ளார்.

அகதிகள் முகாமில் பிறந்த இளம்பெண் படைத்த சாதனை! குவியும் பாராட்டுகள்

அதே போல், டெலிவரி மேனாக வேலை செய்த அவரது தந்தை அகதியாக இருந்த காலத்தில் எவ்வளவு துயரினை சந்தித்தார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கும். தன் குடும்பத்தினருக்கும் ஆதரவளித்தவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபை, வெளியுறவு துறை மற்றும் தனது குடும்பத்தை அமெரிக்காவுக்கு செல்ல அனுமதித்த அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

இதனை தொடர்ந்து தான் சட்டப்படிப்பு படிக்க விரும்புவதாகவும், மேலும் அப்படிப்பிற்காக உதவியை நாடுவதாகவும் கூறிய அவர், அகதிகள் முகாமில் தான் கண்ட அநீதி இனி நடக்காமல் இருக்க, சட்டம் பயின்று மக்களுக்காக வாதிட எது தன்னை தூண்டியது என்று அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அகதிகள் முகாமில் பிறந்து இவ்வளவு கடினமான தடைகளை எதிர் கொண்டு, முதுகலை பட்டம் பெற்ற ஹம்டியா அஹ்மதிற்கு(hamdia ahmed) பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.