மாணவி உயிரிழந்த சம்பவம்; சந்தேக நபர் விளக்கமறியல்

0
100

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதான சந்தேக நபரை மே மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி மாணவியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் நேற்று கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸாரின் விசாரணைகளின் போது, ​​உயிரிழந்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவருக்கும் குறித்த மாணவிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிப்பதாக தெரியவந்துள்ளது.