கனடாவில் பாடசாலையொன்றில் அன்னையர் தின வாசகத்தினால் சர்ச்சை

0
189

கனடாவில் பாடசாலையொன்றில் அன்னையர் தின வாழ்த்துச் செய்தியினால் சர்ச்சை உருவாகியுள்ளது. றொரன்டோவின் கியூ பீச் கனிஸ்ட பொதுப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்கு வெளிப்புற மதிலில் உருவாக்கப்பட்டுள்ள பெரிய செய்திப் பலகையில் எழுதப்பட்ட வாழ்த்துச் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“வாழ்க்கை கையேட்டுடன் வருவதில்லை அது அன்னையுடன் வருகின்றது” என எழுதப்பட்டது. இவ்வாறு வாசகம் எழுதப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு வாசகம் எழுதப்படுவதனால் சமூகத்தின் அனைவரும் உள்ளடக்கப்படாத நிலைமை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில குடும்பங்களில் அன்னையர் இல்லை எனவும் பெற்றோரே இல்லாத குடும்பங்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பாடசாலையொன்றில் அன்னையர் தின வாசகத்தினால் எழுந்த சர்ச்சை | Toronto School Takes Down Mother S Day Message

தற்போதைய காலகட்டத்தில் மரபு ரீதியான குடும்ப கட்டமைப்பினை எல்லா இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது என பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

தந்தையின் அரவணைப்பில் வளரும், பராமரிப்பு நிலையங்களில் வளரும், தாயுடன் தொடர்பு இன்றி வளரும் சிறார்கள் இந்த செய்தியினால் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து வெளிப்புற செய்திப் பலகையில் அன்னையர் தின வாசகம் அழிக்கப்பட்டு மே மாதம் தொடர்பான வாசகமொன்று எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.