ஜனாதிபதி – சம்பந்தனின் சந்திப்பை புறக்கணிக்கும் முக்கிய தமிழ் கட்சிகள்

0
307

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நாளைய தினம் (09.05.2023) நடைபெறவுள்ள சந்திப்பை ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை புறக்கணிப்பாவதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றைய தினம் (08.05.2023) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நடைபெறும் சந்திப்பிலும் பங்கேற்கப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்கு முன்னதாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஊடாக அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதியின் சந்திப்பு
எனினும், ஜனாதிபதியின் சந்திப்பு தொடர்பில் கடந்த காலங்களில் புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் இம்முறையும் அவ்வாறு அழைப்பு விடுத்தால் மாத்திரமே சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.